Title of the document
தமிழகத்தில்மாவட்டத்துக்கு ஒரு அரசுமேல்நிலைப் பள்ளி வீதம் 32மாவட்டங்களிலும் மாதிரிப்பள்ளிகளை ஏற்படுத்தஅரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர்பிரதீப் யாதவ்பிறப்பித்துள்ள அரசாணைவிவரம்: தமிழகசட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் மாவட்டத்துக்கு ஒருஅரசு மேல்நிலைப்பள்ளிவீதம் 32மாவட்டங்களிலும்தேர்ந்தெடுக்கப்பட்ட 32பள்ளிகளுக்குத்தேவையானஉள்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்தி கல்விகற்பிக்கும் தரத்தை மேலும்உயர்த்தும் வகையிலும்,வளர்ந்து வரும் அறிவியல்மற்றும் தொழில்நுட்பவளர்ச்சிக்கேற்ப இந்தப்பள்ளிகள் மாதிரிப்பள்ளிகளாக செயல்படும்வகையிலும் ஒரு பள்ளிக்குரூ.50 லட்சம் வீதம் மொத்தம்ரூ.16 கோடி செலவில்மாதிரிப் பள்ளிகள்உருவாக்கப்படும் என்றஅறிவிப்பைமுதல்வர்எடப்பாடி கே.பழனிசாமிகடந்த ஜூன் 1-ஆம்தேதிவெளியிட்டார்.
என்னென்ன வசதிகள்?:
  
இதன்படி மாவட்டத்துக்குஒரு அரசுமேல்நிலைப்பள்ளி வீதம் 32மாவட்டங்களில் 32 அரசுமேல்நிலைப்பள்ளிகளைதெரிவு செய்து அந்தப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்பக் கணினிஆய்வகம், திறன்வகுப்பறை, முழுமையானஉபகரணங்களுடன் கூடியஆய்வகம், சோலார்விளக்குகள், கண்காணிப்புகேமராக்கள்,வகுப்பறைகளில்கண்ணாடி இழையிலானகரும்பலகைகள்,மாணவர்களுக்கு நவீனவசதியுடன் கூடியவிளையாட்டுத் திடல்,நுண்கலைத் திறனைவளர்ப்பதற்கான வசதிகள்,பள்ளிக் கட்டடங்கள் ஆகியஉள்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்தி மாதிரிப்பள்ளிகளாகஉருவாக்கப்படும்.இவற்றைஉலகத் தரம் வாய்ந்தவசதிகளுடன் கூடியமுன்மாதிரியான மாதிரிப்பள்ளிகளாக உருவாக்கிதரமான கல்வியை அளிக்கஇந்த அரசாணைவழிவகுக்கிறது. இதன்படி,எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2வகுப்பு வரை ஒரேபள்ளியில் தொடங்கி, சிலபிரிவுகள் ஆங்கில வழிக்கல்வியில்மாற்றியமைப்படும்.
இந்தத் துறையின்முன்னோடித் திட்டங்களைசெயல்படுத்துவதில் இந்தப்பள்ளிகளுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும். மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரப்படிகூடுதல் ஆசிரியர்களைதேவையின் அடிப்படையில்மாறுதல் மூலம் பணிநியமனம் செய்யவும்,மாணவர்கள் கல்விமட்டுமின்றி கலை,விளையாட்டிலும் சிறந்துவிளங்க அனைத்துவசதிகளுடன் கூடியமாதிரிப் பள்ளிகளாகஅமைத்திடலாம் எனக்கருதி அரசு அவ்வாறேஆணையிடுகிறது.
ரூ.16 கோடி ஒதுக்கீடு:மேலும் 32 மாதிரிப்பள்ளிகளுக்கு தேவையானஅடிப்படை வசதிகள், இதரவசதிகளை உருவாக்கவும்,மேம்படுத்தவும் பள்ளிஒன்றுக்கு ரூ.50லட்சம் வீதம்32 பள்ளிகளுக்கு ரூ.16கோடியை நிர்வாகஒப்பளிப்பு வழங்கி அரசுஆணையிடுகிறது.
 மீதமுள்ள ரூ.10 கோடியே 50லட்சத்து 16 ஆயிரத்தைசட்டப்பேரவை,நாடாளுமன்றஉறுப்பினர்களின்பங்களிப்பு, சமூகப்பங்களிப்பு திட்டங்கள்மூலம் பெறுவதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர்நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதில்கூறியுள்ளார்.
எந்தெந்தப் பள்ளிகள்?
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post