திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்த
வெளி நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு கதவுகள் கிடையாது.
புத்தகங்கள் நனையாமல், சேதம் அடையாமல் இருப்பதற்காக கூரை அமைக்கப்பட்டு
இரும்பினால் ஆன அலமாரிகள் மட்டும் இருக்கும். மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம்
புத்தகங்கள் இங்கு வைக்கப்படும். பொதுமக்கள் இங்கு வந்து இலவசமாக
புத்தகங்களை எடுத்து சென்று படித்துவிட்டு மீண்டும் அங்கேயே வைத்து
விடலாம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களிடம் உள்ள உபயோகம் இல்லாத
புத்தகங்களை இங்கு வைத்துவிட்டு செல்லலாம். 24 மணி நேரமும் இந்த நூலகம்
திறந்து இருக்கும். மாநகராட்சி ஊழியர் ஒருவர் மட்டும் பணியில் இருப்பார்
Post a Comment