முன்மாதிரி பள்ளி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது*
*பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாவட்டத்துக்கு ஒரு அரசுப்பள்ளியில், கட்டமைப்பு வசதிகளை தன்னிறைவாக்கி, முன்மாதிரி பள்ளியாக மாற்றப்படும் என, சட்டசபையில் விதி 110ன் கீழ், முதல்வர் பழனிசாமி கடந்த ஜூனில் அறிவித்தார்.இதற்கான அரசாணையும் வெளியானது*
*இதன்படி, கோவை மாவட்டத்தில், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது*
*இப்பள்ளியில், ஆயிரத்து 428 மாணவர்கள் படிக்கின்றனர். 51 ஆசிரியர்கள் வகுப்பு கையாள்கின்றனர்*
*ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பள்ளிக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டமைப்பு வசதி, கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் மாற்றுதல் என, தேவைக்கேற்ப வசதிகள் செய்து தரப்படவுள்ளது*
*பள்ளியின் தலைமையாசிரியர் ராஜலட்சுமி கூறியதாவது*
*எங்கள் பள்ளியில், அதிக மாணவர்கள் படிப்பதோடு, நுாறு சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண்கள் பெறும் அரசுப்பள்ளியாக திகழ்கிறது*
*மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ், கம்ப்யூட்டர் லேப், ஆய்வக உபகரணங்கள், நவீன ஆய்வக கட்டடம் கட்டப்படவுள்ளது. வகுப்பறைகளுக்கு டிஜிட்டல் கரும்பலகை பொருத்தப்படும். அந்தந்த பள்ளியின் தேவைக்கேற்ப செயல்திட்டங்கள் தயாரிக்கப்படுவதால், தரம் மேம்படும்,'' என்றார்*
*மாவட்ட கல்வி அலுவலர் (நகர்) கீதா கூறுகையில்,''முன்மாதிரி பள்ளி திட்டத்தின் மூலம், அசோகபுரம் பள்ளி, புதுப்பொலிவு பெறும். உயர்தர ஆய்வகங்கள் அமையவுள்ளதால், அறிவியல் பிரிவு மாணவர்கள், பெரிதும் பலனடைவர்,'' என்றார்
Post a Comment