சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தோம். 4 வாரம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு நான்கு வாரத்தில் தாசில்தார், ஆர்டிஓவிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழங்கவில்லை என்றால் பொதுப்பிரிவில் வைத்து நியமனங்கள் வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றார்
Post a Comment