கஜா புயலால் நாகப்பட்டினத்தில் 136 நடுநிலைப்பள்ளிகள் சேதமாகியுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென் னரசு, சிவசுப்பிரமணி, ராஜா கிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் மாநிலத்தில் பெரும்பாலான இடங் களில் சேதம் ஏற்படும் என்று விவரங்கள் கொடுத்தவுடனேயே முதலமைச்சர் அனைத்து ஆயத்த பணிகளையும் செய்தார். இதை இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டியுள் ளனர். காஜா புயல் வேகத்தைக் காட்டிலும் அரசின் பணிகள் வேகமாக நடந்து உள்ளது.
நேற்றைய தினம் எந் தெந்த மாவட்டங்களில் புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரியவந்ததோ அந்தந்த மாவட்ட பள்ளிகளில் அதா வது சுமார் 24 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புயலால் பள்ளியில் ஏற்பட்ட சேதம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நாகப்பட்டினத்தில் 136 நடுநிலைப்பள்ளிகள் சேதமாகியுள்ளன. இன்னும் முழுமையான விவரங்கள் வரவில்லை.
அந்த விவரங்கள் வந்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிறப்பாசிரியர் நியமனம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. வேண்டு மென்றே ஒரு சிலர் குற்றச்சாட்டுகள் சுமத்துகின்றனர். யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் நேரடியாக என்னிடம் வரட்டும். அவர்களுக்கு பதில் சொல்லப்படும்.
வருகிற ஜனவரி மாதத்தில் நடுநிலைபள்ளிகளில் 52 ஆயிரத்து 432 மாணவர்களுக்கு ஆங்கில கல்வி கற்றுத்தர, எல்கேஜி, யுகேஜி கற்றுத் தர ஜனவரியில் வகுப்புகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக லண்டன், ஜெர்மன் போன்றவற்றிலிருந்து 120 பேராசிரியர்கள் வருகிறார்கள்.
கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை துறை இயக்குனர் மாவட்டத்தில் 2 நாட்களாக முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
நாளையில் இருந்து 50 கூடுதல் மருத்துவர்களும் பணியில் ஈடுபட உள்ளனர். தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
2013-ம் ஆண்டு சிறப்பு தகுதி தேர்வு பெற்றவர்கள் 35 ஆயிரம் பேர் பணி இன்றி உள்ளனரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.
Post a Comment