Title of the document


அரசுப் பள்ளியில் படித்த 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
டாக்டர் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையாக ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.


டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு அறக்கட்டளையின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


 இதைத்தொடர்ந்து, அம்மாணவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு மேல்படிப்புக்கான கல்வித்தொகையையும் இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது



இந்நிலையில், 2017-2018 ஆம் கல்வியாண்டில் 10 -ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


நிகழ்வுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார்.


இதில், ரோட்டரி முருகானந்தம், ரோட்டரி ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 6 மாணவ, மாணவிகளுக்கு தலா 15 ஆயிரம் வீதம் ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கல்வி உதவித்தொகையாக வழங்கி வாழ்த்தினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post