Title of the document

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மற்றும் மின்சார இணைப்பு வேலைகளில் துரிதமாக செயல்பட்டு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றிற்கு 3 நாள் சம்பளம் வழங்கப்படும் என மின்வாரியம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கஜா புயல் கடந்த வாரம் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன் படியே, வேதாரண்யம் நாகப்பட்டினம் நோக்கி வந்த கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
டெல்டா மாவட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முதல் வாழை மரம், தென்னை மரம் என அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, மின் கம்பங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்ததால், மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக மக்கள் மின்சாரம் இல்லாமல், வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு நிலைமையை சமாளிக்க பெரும் முயற்சி மேற்கொண்டு அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஊழியர்கள் இரவும் பகலுமாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மற்றும் மின்சார இணைப்பு வேலைகளில் துரிதமாக செயல்பட்டு வரும் மின்வாரிய ஊழியர்களை ஊக்கு விக்கும் விதமாக ஒரு நாள் வேலைக்கு 3நாள் சம்பளம் வழங்கப்படும் என மின்வாரியம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post