Title of the document

நிகழ்வுகள்
1492 – உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.
1502 – கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.
1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.
1893 – கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அக்டோபர் புரட்சி: விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரஷ்யாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).
1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றின.
1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.



1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: “ஆர்மேனியா” என்ற சோவியத் மருத்துவக் கப்பல் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.
1941 – நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.
1956 – சூயஸ் கால்வாய் பிரச்சினை: எகிப்தில் இருந்து இடனடியாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் படைகளை வெளியேறுமாறு ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கேட்கப்பட்டது.
1983 – ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.
1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.
1996 – நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

பிறப்புகள் 
1728- ஜேம்ஸ் குக், ஆங்கிலேய நாடுகாண் பயணி, கடற்படை அலுவலர் (இ. 1779)
1858 – பிபின் சந்திர பால், இந்திய செயல்திறனாளர் (இ. 1932)
1867 – மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)
1876 – சார்லி டவுன்சென்ட், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1958)
1879 – லியோன் ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியாளர், (இ. 1940).
1888 – சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).
1913 – அல்பேர்ட் காம்யு – நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர், (இ. 1960).
1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய மருத்துவர்
1954 – கமல்ஹாசன், தமிழ் நடிகர்.
1959 – சிறிநிவாசு, பாடகர்
1969 – நந்திதா தாஸ், இந்திய நடிகர்.
1975 – வெங்கட் பிரபு, இந்தியத் திரைப்பட இயக்குநர்
1980 – கார்த்திக், பாடகர்
1980 – ஜேம்ஸ் பிராங்கிளின், நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர்
1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை




இறப்புகள் 
644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)
1862 – பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர்
1913 – ஆல்ஃவிரடு அரசல் வாலேசு, ஆங்கில உயிரியலாளர் (பி. 1823)
1947 – கோ. நடேசையர், இலங்கையின் மலையகப் பத்திரிகையாளர் (பி. 1887)
1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர்.
1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1884)
1993 – திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).
2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).
2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post