Title of the document

நடப்பு கல்வியாண்டில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், 1,474 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


சுற்றறிக்கை விபரம்: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் பெறப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப, கால அவகாசமாகும். இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் நலன் கருதி, தொகுப்பூதிய அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப அனுமதி வழங்கப்படுகிறது. ஆறு மாத காலத்துக்கு மட்டும், தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலை பிரிவுக்கான உதவி தலைமை ஆசிரியர், மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு மூலம், நிரப்பலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, 11 பாடங்களுக்கு மட்டும் நிரப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி, மாதம், 7,500 ரூபாய் வீதம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி, நியமனம் நடக்க வேண்டும். இதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டம் - ஆசிரியர் எண்ணிக்கை 
அரியலூர் - 21 
சென்னை - 14 
கோவை - 45 
கடலூர் - 35 
தர்மபுரி - 17 
திண்டுக்கல் - 21 
ஈரோடு - 61 
காஞ்சிபுரம் - 77 
கன்னியாகுமரி - 17 
கரூர் - 23 
கிருஷ்ணகிரி - 33 
மதுரை - 15 
நாகை - 135 
நாமக்கல் - 30 
பெரம்பலூர் - 20 
புதுக்கோட்டை - 46 
ராமநாதபுரம் - 28 
சேலம் - 30 
சிவகங்கை - 12 
திருவண்ணாமலை - 117 
தஞ்சை - 60 
நீலகிரி 67 
தேனி - 11 
திருநெல்வேலி - 35 
திருப்பூர் - 36 
திருவள்ளூர் - 106 
திருவாரூர் - 97 
திருச்சி - 31 
தூத்துக்குடி - 32 
வேலூர் - 120 
விழுப்புரம் - 62 
விருதுநகர் - 20 
மொத்தம் - 1,474

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post