Title of the document
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 2019 ல் இருந்து பாலித்தீன் பயன்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கான நடவடிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எடுத்து வருகிறார் என கூறினார்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்காகத்தான் பள்ளிக்கல்வித்துறை இயங்கிக்கொண்டு இருக்கிறது.

இதற்குமுன்னர் வரை வசதி படைத்தவர்கள் தான் தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர், தற்போது கஷ்டப்படும் ஏழைமக்கள் கூட தனியார் பள்ளியை நாடிச்செல்கின்றனர். அதற்கு காரணம் தங்கள் குழந்தைகள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மோகம் தான்.

கிராமப்பகுதி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வர் தலைமையில் அக்.22ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார்.

கிராமப்பகுதி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சருடன் நாளை 22ம் தேதி (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழக அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகள் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். அவர் அளித்த பேட்டிக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post