பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக தொடங்கப்பட்ட K.G வகுப்பில் 190 பேர் சேர்ப்பு

Image result for lkg ukg

கே.ஜி. வகுப்பில், 190 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு உள்ளனர். மாதிரி பள்ளியில், ஏழு பேர் சேர்ந்துள்ளனர். தமிழக அரசு, இந்தாண்டு முதல், கே.ஜி. வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதன்படி கடந்த, 17 முதல் கே.ஜி. வகுப்புகள் துவங்கி உள்ளன.


பள்ளி கல்வித்துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 108 ஆண், 82 பெண் குழந்தைகள் கே.ஜி. வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்றாம் வகுப்பில், 38 ஆண், 26 பெண் குழந்தைகள் நேற்று முன்தினம் நிலவரப்படி சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள, ஒரே மாதிரி பள்ளியான ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கே.ஜி. வகுப்பில், ஏழு மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். விரைவில் இரண்டு பேர் சேர உள்ளனர். மாதிரி பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை அடுத்தாண்டு முதல் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.