பிளாஸ்டிக் பயன்பாடு விழிப்புணர்வு: பள்ளிகளுக்கு சி.இ.ஓ., உத்தரவுதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பயன்பாடு இல்லை என்பதை உறுதி செய்து, பள்ளி நிர்வாகங்கள், பள்ளி முன், அறிவிப்பு பலகை வைக்க, சி.இ.ஓ., அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என, 100 சதவீதம் ஆய்வு செய்த பின் 'பிளாஸ்டிக் பயன்பாடு அற்ற பகுதி' என்ற அறிவிப்பு பலகையை, அனைத்து பள்ளிகளும், மக்கள் கண்ணில் படுமாறு வைக்க வேண்டும். தினமும் காலையில், கடவுள் வாழ்த்தின்போது, பிளாஸ்டிக் தடை குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், மாணவர்களின் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள வீடுகளில், பிளாஸ்டிக் தடை குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:

Post a Comment