விருத்தாசலம் பள்ளி மாணவர் கின்னஸ் சாதனை

கர்நாடக மாநிலம், பெல்காமில் ரோல்பால் கின்னஸ் சாதனைக்கான போட்டி கடந்த மே மாதம் நடைபெற்றது. போட்டியில் விருத்தாசலம் ஜெயப்பிரியா சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியின் மாணவர் அபிராம் பங்கேற்றார்.
தற்போது, இப்போட்டியை கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியது.
இச்சான்று பெற்ற மாணவரை பள்ளியின் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் பாராட்டு பரிசு வழங்கி கெளரவித்தார்.
மேலும், கடந்த மாதம் கடலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களையும் பள்ளியின் தாளாளர் பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் எம்.ஸ்ரீலதா, மேலாண்மை அலுவலர் ஆர்.சேதுராமன், பயிற்சியாளர் கோவிந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 Comments:

Post a Comment