Title of the document

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள கொடிப்பள்ளத்தில் கான்சாகிப் வாய்க்கால் இருக்கின்றது. இந்த பகுதியில் கடந்த சில நாளுக்கு முன்னர் முதலை ஒன்று சுற்றித்திரிந்து கொண்டு பொதுமக்களை அசச்சுறுத்தி வந்தது. 
இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் மக்கள் புகார் அளித்ததை அடுத்து., வனத்துறையினர் உதவியுடன் அந்த முதலையானது தண்ணீருக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

இந்நிலையில்., இந்த வாய்க்கால் கரையோரம் இருக்கும் வல்லம்படுகை., வக்காரமாரி மற்றும் பெராம்பட்டு பகுதிகளில் உள்ள வாய்க்கால் கரையோரத்தில்., அங்குள்ள நீர்நிலைகளில் இருக்கும் முதலைகள் அவ்வப்போது நீர்நிலைகளை விட்டு வெளியே வந்து மக்களை அவ்வப்போது அசச்சுறுத்தி வருகின்றது.

இதேபோல்., சிதம்பரத்தை அடுத்துள்ள மடப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று காலை பொழுதில் வழக்கம்போல மாணவ - மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்தனர்.

அப்போது மாணவ - மாணவியர்கள் யாரும் பள்ளிக்குள் செல்லாமல் நிற்பதை கண்டு மாணவர்களிடம் விசயத்தை கேட்டறிந்த ஆசிரியர் அந்த பகுதியில் இருந்த முதலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post