வேலை வேண்டுமா..? தமிழக அரசில் புள்ளியியல் விரிவுரையாளர் வேலை


தமிழ்நாடு மருத்துவத்துறையில் புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பதவி: Lecturer in Statistics
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம், டிசி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 
தகுதி: முறையான பாடத்தின்கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
தேர்வு நடைறும் தேதி: 12.01.2019
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
தேர்வு கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை:www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2018

0 Comments:

Post a Comment