ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம்


ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் இன்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க கோருதல் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி நேற்று திறந்துள்ள நிலையில் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இதுகுறிதது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டனி மாவட்ட செயலாளர் லியோ ஜரால்டு எமர்சன் கூறியது, ‘‘தமிழக அரசிடம் புதிய கோரிக்கை எதையும் கேட்கவில்லை. அரசு ஊழியர்களின் எந்த கோரிக்கையும் அரசால் ஏற்றுக்கொள்ள வில்லை. 21 மாத ஊதிய குழு நிலுவைதொகையை நீதிபதிகளும் அமைச்சர்களும் பெற்றுவிட்ட நிலையில் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தர மறுப்பது ஏன். ஊதிய முரன்பாடுகள் வேண்டாம் என்று தான் போராடுகிறோம். தமிழக அரசு எங்களின் நியாமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்

0 Comments:

Post a Comment