பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி வாரச் சந்தை


ஆம்பூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் மாதிரி வாரச் சந்தையை திங்கள்கிழமை நடத்தினர்.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சார்பில் மாதிரி வாரச்சந்தை நடத்தப்பட்டது.
இந்த சந்தையில் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், உருளைக் கிழங்கு, நிலக்கடலை, பருப்பு வகைகள், அரிசி, புளி, மிளகாய், உப்பு, வெண்டைக்காய், முருங்கைக் காய், தானிய வகைகள் போன்றவற்றை வாரச் சந்தைகள் போன்றே விற்பனை செய்தனர். பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.
மாணவர்கள் சந்தைகள் செயல்படும் விதம் குறித்து முழுமையாக அறியும் வகையில் தலைமை ஆசிரியர் பி.சுகுமார், ஆசிரியை கனகா ஆகியோரின் மேற்பார்வையில், அனைத்து ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் இந்த மாதிரி வாரச் சந்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

0 Comments:

Post a Comment