மேலும், பள்ளி வகுப்பறையின் மேற்கூரை உடைந்து ஓட்டை, உடைசலாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் தண்ணீர் வழிந்தோடுகிறது. மாணவர்கள் மழையில் நனைந்தபடி பாடங்களை கவனிக்க வேண்டியுள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று சென்னசமுத்திரம் கிராமத்தில் சுமார் அரைமணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
ஓட்டை உடைசலான மேற்கூரையின் வழியாக உள்ளே மழைநீர் கொட்டியதால் மாணவர்கள் இங்கும், அங்கும் மாற்றி மாற்றி அமரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி சென்னசமுத்திரம் கிராமம் வெங்கடேசபுரம் ஆரம்பப் பள்ளியில் சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Post a Comment