Title of the document
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், மாணவர் குறைவாக உள்ள இடங்களில், ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதப்படி, மாணவர் எண்ணிக்கையை விட, அதிக ஆசிரியர்கள் உள்ளனர். குறிப்பாக, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில், பல பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.இதையடுத்து, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், இதுபோன்ற இடமாறுதல் செய்ய முடியவில்லை.எனவே, உபரியாக ஆசிரியர்கள் உள்ள, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, அந்த பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வுபெறுவோர் பணியிடத்தில் புதியவர்களை நியமிக்காமல், அரசிடம் ஒப்படைக்குமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment