Title of the document
இப்போதெல்லாம் ஏதாவது தகவல் வேண்டுமானால், உடனே கூகுளை தான் கேட்போம். அந்த அளவுக்கு கூகுளை நம்ப வேண்டிய காலகட்டம் இது. ஆனால், அதிலும், இப்போது  ஆன்லைன் மோசடி பேர்வழிகள் ஊருடுவி விட்டனர். முன்பெல்லாம், வங்கி, இன்சூரன்ஸ், பிஎப் போன்ற தேவைகளுக்கு நாம் முகவரி, போன் நம்பர் என்று எது வேண்டுமானாலும், யாரையாவது கேட்டு தெரிந்து ெகாள்வோம். நேரில் ேபாய் விசாரித்து  தெரிந்து கொண்டு, தேவைகளை நிறைவேற்றி திரும்பி விடுவோம். அதில் யாருடைய தலையீடும் இருக்காது. நாமும் ஏமாற வாய்ப்பு இருக்காது.  ஆனால், இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், கூகுளை தேடுவது என்ற பழக்கம் பலரிடம் பரவி விட்டது. தகவல் தொடர்பு வசதிகள் பெருகி விட்ட இந்த காலகட்டத்தில் வங்கி போன் நம்பர்  வேண்டுமானாலும் கூகுளை தான் தேட வேண்டியிருக்கிறது. அப்படி கூகுளில் காணப்படும் நம்பர் உண்மையானது தானா என்று யாரும் பார்ப்பதில்லை. நயமாக பேசினால், நாம் ஏடிஎம், பின்  நம்பர் வரை தந்து விடும் போக்கு பலரிடம் உள்ளது.  ஆனால், உஷராக இல்லாமல், போனில் தகவல் கேட்போரிடம் தொடர்ந்து பேசி விவரத்தை தந்தால், கடைசியில் ஏமாறும் நிலை ஏற்படுகிறது.
 மும்பை நகரில் ஆன்லைன் பிஎப் மோசடி சில மாதங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் சிக்கி பணத்ைத இழந்துள்ளனர். இது பற்றி பாந்த்ரா போலீஸ்  விசாரணை செய்து வருகிறது.   இந்த மோசடி என்ன தெரியுமா? தொழிலாளர் சேமநல நிதி அலுவலக போன் என்று கூகுளில் போடப்பட்டுள்ள ஒரு போன் நம்பர் தனி நபருக்கு செலகிறது. அவர் பெயர் தீபக் சர்மா. அவர் தன்னை பிஎப்  அதிகாரி போல மாற்றி, போனில் தகவல் கேட்பவர்களிடம், பிஎப் தகவல்களை சொல்லும் சாக்கில், ஆதார் எண், பான் எண், ஏடிஎம் எண் என்றெல்லாம் கேட்டு தெரிந்து மோசடி செய்வது  கண்டுபிடிக்கப்பட்டது.   இது பற்றி பாந்த்ரா பிஎப் அலுவலகம், ஒரு எச்சரிக்கை அறிவிப்பை பத்திரிகைகளில் வெளியிட்டது. அதில், பிஎப்  அலுவலக தொலைபேசி  எண் தேவைப்பட்டால் கூகுளில் தேடும் போது, அது  உண்மையான போன் எண்  தானா என்று ட்ரூகாலர் மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள். பல போலி எண்களை தந்து ஏமாற்றுவோர் உலவி வருகின்றனர். கூகுள் தேடுதலில் பாந்த்ரா பிஎப் அலுவலக  போன் எண் என்று தரப்பட்டுள்ளது தீபக் சர்மாவுக்கு போகிறது. அவர் யார் என்று விசாரணை நடக்கிறது.  அவரது போன் தற்போது துண்டிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும், இப்படி தவறான  நபர்களின் நூதன மோசடியில் சிக்க வேண்டாம் என்று அந்த விளம்பரத்தில் அறிவுறுத்தி உள்ளது.  இப்படி பிஎப் தகவல் மட்டுமின்றி, இன்சூரன்ஸ், வங்கி ஏடிஎம், கிரெடிட் கார்டு போன்ற விஷயங்களிலும் கூகுள் மூலம் மோசடி செய்யும் பேர்வழிகள் அலைகின்றனர். அவர்கள் வலையில் விழ  வேண்டாம் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post