Title of the document
மாணவர்களின் கல்வி விஷயத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்
மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும்
இதற்காக அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ தரத்துக்கு மாற்றி அமைக்கும் வகையில் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தக் குழுவுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இருந்தால் மட்டுமே புதிய பாடத் திட்டம் சிறப்பாக அமையும்
எனவே, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரனை பணிமாற்றம் செய்யக்கூடாது எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனை பணிமாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், புதிய பாடத்திட்டத்துக்கான பணி முடிவடைந்து விட்டதால், ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் வேறு துறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனை வேறு துறைக்கு மாற்றியிருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. மாணவர்களின் கல்வி விஷயத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்கக்கூடாது என கருத்துத் தெரிவித்தார்
மேலும், புதிய பாடத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு அவரை அழைக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post