Title of the document
சென்னை: சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள்
'கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக, குறைந்தபட்சம்
மாதம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சங்க
கூட்டமைப்பு நிர்வாகிகளுடன், அமைச்சர் சரோஜா, சென்னை, தலைமைச் செயலகத்தில்,
நேற்று பேச்சு நடத்தினார். கோரிக்கைகளை ஏற்க, அரசு முன்வராததால், பேச்சு
தோல்வி அடைந்தது.அதைத் தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள், இன்று கறுப்பு சட்டை
அணிந்து, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அடுத்த கட்ட போராட்டம்
குறித்து, இன்று முடிவு செய்ய உள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment