அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான குறைதீர் கூட்டம் அக்.5-க்கு தள்ளிவைப்பு


திருவண்ணாமலை, செய்யாறில் புதன்கிழமை (அக்டோபர் 3) நடைபெற இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் புதன்கிழமை திருவண்ணாமலை, செய்யாறில் நடைபெறுவதாக இருந்தன. நிர்வாக காரணங்களால் புதன்கிழமை நடைபெற இருந்த சிறப்பு குறைதீர் கூட்டங்கள் வரும் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரும் 5-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்திலும், அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடைபெறும்.
இந்தச் சிறப்பு குறைதீர் கூட்டங்களில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்துத் துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் தங்களின் பணியமைப்பு, பணிப் பயன் தொடர்பான நிலுவைக் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
மேலும், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவை தொடர்பான கோரிக்கைகளையும் தொடர்புடைய பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தெரிவிக்கலாம்.
இந்தச் சிறப்பு குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது அவற்றின் தன்மை அடிப்படையில், விரைந்து தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment