Title of the document
சிவகங்கை மாவட்டத்தில் இலுப்பக்குடி நடுநிலைப் பள்ளி சமீபத்தில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளியாகவும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உயர்நிலைப் பள்ளியாகவும் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியராக இருந்தவர், இடையமேலுார் காலனி பள்ளிக்கு மாற்றப்பட்டார். பட்டதாரி ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்து கொள்ளப்பட்டனர்.மேலும் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பணியிடமும் நிரப்பப்பட்டது. ஆனால் தொடக்கப் பள்ளிக்கு இதுவரை தலைமைஆசிரியர் நியமிக்கவில்லை. அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமைஆசிரியர்கள் இல்லாததால், பள்ளி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தலைமைஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தி 15 தினங்களுக்கு முன், மாவட்டக் கல்வி அலுவலரிடம் முறையிட்டோம். உடனடியாக நிரப்புவதாக உறுதியளித்தும் நடவடிக்கை இல்லை.தற்போது இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறந்தநிலையில் மாணவர்கள் நலனுக்காக தலைமைஆசிரியரை நியமிக்க வேண்டும், என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post