Title of the document
பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலாதுறை இணைந்து, கிராமப்புற மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்
*மாவட்டத்துக்கு, 150 பேரை தேர்வு செய்து, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கல்வி சார் சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.மாவட்டத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
*கூட்ட நெரிசல் இல்லாத இடங்களுக்கு, வானிலை மாற்றங்களை கருத்தில்கொண்டு, ஒரு நாள் கல்வி சுற்றுலா, வரும், 31க்குள் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
*கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களை மூன்று பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டும். மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் இடம்பெற வேண்டும்
*ஒரு பஸ்சில் நான்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும். காலை, 7:00 முதல், மாலை 5:00 மணி வரை செல்லும்
*ஒரு நாள் சுற்றுலாவுக்கு, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது மழை பெய்வதால், வானிலை மாற்றம் சீரானதும், சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்' என்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post