கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை அதன் சுற்றுப்புறபகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இந்நிலயில் , சென்னையில்எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment