2ஆம் வகுப்புவரை வீட்டுப்பாடம் தரக்கூடாது மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை... மத்திய அரசு தகவல்


கூடாது... கூடாது... 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற கோர்ட் உத்தரவின் படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம்.
பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 2 ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது, மீறினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மாநில அரசுகளுக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment