துபாய் நாட்டிற்கு ஆசிரியர் தேவைபடுதால் வருகிற (28.10.18) ஞாயிறு அன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், துபாய் நாடும் இணைந்து நேர்காணல்(Interview) நடைபெறுகிறது. அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
துபாயில் பள்ளி ஆசிரியர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
துபாய் நாட்டில் உள்ள கல்வி நிறுவனத்துக்கு ஆங்கில வழியில் படித்து சிபிஎஸ்இ பள்ளியில் பணி அனுபவம் பெற்ற முதல்வர், இளநிலை, முதுநிலை ஆசிரியர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்பப் பள்ளி ஆசிரி யர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், முஸ்லிம் ஆசிரியைகள் தேவைப் படுகிறார்கள். கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங் களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
முதல்வர் பதவிக்கு மாத ஊதியம் ரூ.3 லட்சம், இளநிலை, முதுநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மற்ற ஆசிரியர் களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வழங்கப் படும். தகுதியுடைய நபர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண் ணப்பத்துடன் கல்வித் தகுதி, பணி் அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி எண்களில் அல்லது 82206 34389, 9566239685 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 27 முதல் 45 வரையுள்ள கொத் தனார்கள், பிளாஸ்டரிங் மெஷின் ஆபரேட்டர்கள், சென்ட்ரிங் கார்பென்டர்கள், போர்மேன்கள் தேவைப்படுகிறார்கள். கொத்தனார்கள், பிளாஸ் டரிங் மெஷின் ஆபரேட்டர் கள், சென்ட்ரிங் கார்பென்டர் பதவிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது இசிஎன்ஆர் பாஸ்போர்ட் அவசியம்.
போர் மேன் வேலைக்கு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் தேர்ச்சி யும், வளைகுடா நாட்டில் பணியாற்றிய அனுபவமும் வேண்டும். போர்மேன்களுக்கு மாத ஊதியம் ரூ.40 ஆயிரமும், இதர பணிகளுக்கு ரூ.24 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இலவச இருப்பிடம் மற்றும் அந்நாட்டின் சட்டத்துக்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். உரிய தகுதியுடைய நபர் கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, பணி அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப் படங்களுடன் வரும் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் முதல் கட்ட நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய தளத்தைப் பார்க்கலாம். அல்லது தொலைபேசி, செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.