திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காந்தி ஜெயந்தியையொட்டி, 150 மாணவிகள் காந்தி வேடம் அணிந்து அசத்தினர். திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்றார். விழாவில், மகாத்மா காந்தி போல வேடம் அணிந்த 150 மாணவிகள், மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒரே சமயத்தில் 150 மாணவிகள் மகாத்மா காந்தி போல வேடம் அணிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேலும், காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்ட தியாகம் குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பள்ளி மாணவிகள் அனைவருக்கும் இலவச பாடப்புத்தகங்களை முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வழங்கினார். மேலும், தன்னார்வ சேவை அமைப்பின் மூலம் நகராட்சி பள்ளிக்கு ரூ2 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

Post a Comment