Title of the document



வன உயிரின வாரத்தை முன்னிட்டு  மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் வருகிற 21ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு:அக்டோபர் மாத முதல் வாரம், வன உயிரின வாரமாக  வனத்துறையால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு  இவ்வாண்டும் திருச்சி மாவட்டத்தில் வனத்துறை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி வருகிற 21ம்  தேதி பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சியில் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. அதன்படி  ஓவியப்போட்டி பகல் 10மணி முதல் 12மணி வரை (எல்.கே.ஜி முதல் கல்லூரி  வரையிலான மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட) நடக்கிறது. இதில் இயற்கையில்  வனவிலங்குகள் என்ற தலைப்பில் ஓவியம் வரைய வேண்டும். தொடர்ந்து பேச்சுப்போட்டியானது மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தமிழ்  மற்றும் ஆங்கிலம் (9ம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான மாணவ மாணவியர்  (மாற்றுத்திறனாளிகள் உட்பட) வன விலங்கு பாதுகாப்பில் மக்களின் பங்கு என்ற  தலைப்பில் பேச்சுப்போட்டி நடக்கிறது.
பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறுபவர்கள்  மாநில அளவில்  சென்னையில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை  பெறுவார்கள். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி 0431-2414265 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு கலெக்டர் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post