அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்க, ஆண்டு வருமானம், 1.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்; ஏழாம் வகுப்பு இறுதித்தேர்வில், 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Post a Comment