
எங்கள் பள்ளி மாணாக்கர்கள் எங்கள் வளாகத்தில் பயனற்றுக் கிடந்த பழைய
டயர்களை தங்களது சுயமுயற்சியால் வண்ணம் தீட்டி சில மாற்றங்களை செய்து
பயனுள்ள பொருட்களாக மாற்றியுள்ளனர்.
பள்ளிக் குழந்தைகள் அமர்ந்து எழுதும் வகையான டெஸ்க்குகள், நூலக புத்தகங்கள்
அடுக்கப் பயன்படும் தாங்கிகள், தண்ணீர் குழாய் சுருட்டி வைக்கும்
பாதுகாப்பு வளையம் , குழந்தைகள் அமர்ந்து விளையாட ஊஞ்சல், கேரம் போர்டு
வைத்து விளையாடும் ஸ்டேண்ட் என பலவிதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள இவற்றைக்
கண்டு ஊர்மக்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி விட்டுச் செல்கின்றனர்..
காணொளியைக் காண கீழே சொடுக்கவும்..
Post a Comment