Title of the document
''பகுதி நேர சிறப்பாசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் செயல்படும், நுாறு நுாலகங்களில், 'வை -பை' வசதி ஏற்படுத்த, ஏ.சி.டி., நிறுவனத்துடன், பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமை செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தப்படி, ஏ.சி.டி., நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு, இலவசமாக நுாலகங்களில், 'வை - பை' வசதியை வழங்கும். வை - பை வசதி ஏற்படுத்தப்படும் நுாலகங்களில், மாணவர்கள்,

தங்கள் அலைபேசிகளில் நுால்களை பதிவிறக்கம் செய்து படிக்க இயலும்.

இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, வாரத்திற்கு மூன்று நாட்கள், இரண்டு மணி நேரம் மட்டுமே, பணி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியிலிருந்து, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது, 7,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

அவர்கள் விரும்பும் இடங்களுக்கு, பணி

மாறுதல் வழங்கப்

படுகிறது. அவர்களை

பணி நிரந்தரம் செய்ய

வாய்ப்பில்லை. பணி

அமர்த்தும் போதே, பணி நிரந்தரம் செய்யப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post