நிலவிற்கு முதல் முறையாக செல்லும் சுற்றுலா பயணி ஜப்பான் கோடீசுவரர்

ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் நடந்த விழாவில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. நிலவிற்கு செல்ல போகும் ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா உலகம் முழுக்க வைரலாகி உள்ளார்.
‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், சந்திரனின் உட்புறத்தில் மிக தீவிரமான ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளை சந்திரனுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ’பிக் பால்கன்’ என்ற மிகப்பெரிய ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரிக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சந்திரனுக்கு முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் நிறுவனம் என்ற பெருமையை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ பெறும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்திரனுக்கு 2 சுற்றுலாப் பயணிகளை அனுப்பி வைக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment