விளையாட்டு உபகரணங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாத அரசு பள்ளிகள்

அரசு மற்றும் நிதியுதவி பெரும் பள்ளிகளில் 70 சதவீதம் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில்  1068 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 204 உயர்நிலை பள்ளிகள், 264 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட கல்வி துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், 70 சதவீதம் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், பள்ளிகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும், வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

0 Comments:

Post a Comment