Title of the document
பணி நிரந்தரம், முழுநேர பணி வழங்க வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் செப்.24 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, கட்டடக்கலை பயிற்றுவிப்பதற்காக கடந்த 2012ல் பள்ளி கல்வி துறை மூலம் 16,549 சிறப்பாசிரியர்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

தற்போது 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் குமரேசன்:

2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களில் 12 ஆயிரம் பேர் மட்டுமே பணி புரிந்து வருகிறோம். வேறு எந்த பணிக்கும் செல்ல முடிவதில்லை.

சொந்த ஊரில் பணி நியமனம் இன்றி 50 கி.மீ., துாரத்துக்கும் அதிமான துாரத்தில் பணியாற்றி வருகிறோம்.

சம்பளம் போக்குவரத்து செலவினத்துக்கு மட்டுமே உதவுகிறது. சொந்த ஊரில் பணிபுரியும் வகையில் நடந்த கலந்தாய்வு கண் துடைப்பாகவே இருந்தது.

மற்ற மாநிலங்களில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டும், சம்பளமாக 24 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இவற்றை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்தும் அரசு செவிமடுக்கவில்லை.

எனவே, முழு நேர பணி, பணி நிரந்தரம், அனைத்து வேலை நாளிலும் பணி வழங்கி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற செப்.24 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post