கல்வித்துறையில் மாற்றம்: அலுவலக பணிகளில் தடுமாற்றம்

கல்வித்துறை அலுவலகங்களில், 90 சதவிகித பணியாளர்கள் மாற்றப்பட்டதால், அனுபவமின்மை காரணமாக, அலுவலக பணிகளில் தடுமாற்றம் காணப்படுகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கீழ், முதன்மைக்கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம், உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகங்கள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கடந்த பல ஆண்டுகளாக, தொடர்ந்து குறிப்பிட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். நடப்பாண்டில், மூன்றாண்டு பணிபுரிந்த பணியாளர்களுக்கு, கட்டாய இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டு, அதன்படி கடந்த மாதத்தில் மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில், 90 சதவிகித பணியாளர்கள் மாற்றப்பட்டனர். இதனால், அனைத்து இருக்கை பணிகளிலும், போதிய அனுபமின்மை காரணமாக, தடுமாற்றம் காணப்படுகிறது.


0 Comments:

Post a Comment