மாணவர் எண்ணிக்கையை உயர்த்தாவிட்டால், மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கு, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த, பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.
விஜயதசமி நாளான, அக்., 19ல், சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தி, புதிய மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
0 Comments:
Post a Comment