அரசு சட்டக்கல்லூரி துணை பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அட்டவணை

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள துணைப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள துணைப் பேராசிரியர் மற்றும் புகுமுக சட்டப் படிப்புக்கான துணைப் பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்தி நேரடியாக நியமனம்  செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது.
போட்டித் தேர்வுகள் அக்டோபர் 13ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. அடுத்து, புகுமுக சட்டப் படிப்புக்கான துணைப் பேராசிரியர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் அக்டோபர் 13ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை  நடக்கிறது. தேர்வுகள் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடக்கிறது. இந்த போட்டித் தேர்வில் அரசியல் அறிவியல், பொருளியல், ஆங்கிலம், சமூகவியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கு 5 நாட்கள் தேர்வு  நடக்கும். 

0 Comments:

Post a Comment