Title of the document


வீட்டுப்பாடம் ரத்து நடைமுறை
மாநில அரசு பள்ளிகளிலும்
கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது*
*வீட்டுப் பாடம் மாணவரின் கற்றல் திறனை மேம்படுத்தும் என சில கல்வியாளர்கள் கூறும் நிலையில், அது தேவையில்லை என பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்*
*மாநில பாடத்திட்டம், சமச்சீர் கல்வித்திட்ட அடிப்படையில், எட்டாம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறையில், வகுப்புகள் நடத்தப்படுகின்றன*
 *ஒவ்வொரு பருவத்துக்கும் பிரத்யேக புத்தகங்கள் அளிக்கப்படுவதோடு, பாடங்கள் கையாளப்பட வேண்டிய முறை குறித்து, ஆசிரியர்களுக்கு பாடத்திட்ட செயல்பாடுகளில் விளக்கப்பட்டுள்ளன*
*ஒவ்வொரு பாடத்தின் பின்புறமும், சுய மதிப்பீட்டு பகுதி, குழு மதிப்பீட்டு செயல்பாடுகள் உள்ளன*
*இதை பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றுவதில்லை; ஆனால், வீட்டுப்பாடம் என்கிற பெயரில், எழுத்துப் பயிற்சிக்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது*
*வாசித்தல், பாடத்திட்ட கருத்துகளை புற சூழலில் இருந்து நேரடியாக பெறுதல் என, செயல்வழி முறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என பெற்றோர், கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்*
*இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வந்த வீட்டுப்பாட நடைமுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என உத்தரவும் பிறப்பித்தது. மேலும், வகுப்பு நேரத்திலேயே, எழுத்துப் பணிகளை முடிக்க உத்தரவிட்டது. செயல்வழி முறைகளில், வீட்டுப் பாடம் அளிக்கவும் அறிவுறுத்தியது*





*இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, சி.பி.எஸ்.இ. அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது*
*இதே நடைமுறையை, மாநில கல்வித்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளும் மேற்கொண்டால், மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட முடியும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்*
 *அதேவேளையில் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தவும், அவர்களது கவனம் சிதறாமல் இருக்கவும் வீட்டுப்பாடம் அவசியம் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்*
*இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீரப்பெருமாள் கூறியது*
*அனைத்துப் பாடங்களுக்கும், தினமும் வீட்டுப்பாடம் அளிக்கப்படுகிறது*
 *பெரும்பாலும் குழந்தைகள் எழுதிக்கொண்டே இருக்கின்றனர்*
*இது, பாடத்திட்டத்தின் மீதுள்ள, ஈடுபாட்டை குறைத்துவிடும். ஆறு வயது முதல் பத்து வயது வரை மாணவர்கள் நன்கு விளையாடும் பருவம்*
 *அதனால் கடினமான பாடங்களைக் கூட குழந்தைகளுக்கு புரியக்கூடிய வகையில் கதை வடிவிலும், ஈர்க்கக் கூடிய வகையிலும் நடத்த வேண்டும்*
*இதன் மூலம் ஒவ்வொரு பாடமும் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதியும்*
*வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால் தனியார் பள்ளிகளில் போதுமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருப்பதில்லை*
 *அதனால் ஆசிரியர்களின் பொறுப்புகள் வீட்டுப் பாடம் என்ற பெயரில் மாணவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இது குழந்தைகளின் சுதந்திரத்தை முற்றிலுமாக முடக்கி விடுகின்றன. எனவே வீட்டுப் பாடங்களை பள்ளிகள் கைவிட வேண்டும் என்றார்*
*புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன்*
*பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையில் படிக்கும் வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தேவையில்லை என்பதே எனது கருத்து*
*தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார்*
*செல்லிடப்பேசி உள்ளிட்ட மாணவர்களின் கவனத்தைச் சிதற வைக்கும் பல விஷயங்கள் பெருகி விட்ட இன்றைய சூழலில் சிறிது நேரம் கூட வீடுகளில் பயிற்சி எடுக்காவிட்டால் மாணவர்களின் கற்றல் திறன் கேள்விக்குறியாகும்*
 *மேலும் பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் என்ன பாடம் நடத்தப்பட்டது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் என்ன பெற்றோர் தினமும் கேட்கின்றனர். இதனால் பெற்றோர் -ஆசிரியரிடையே நல்லுறவு மேம்படுகிறது என்றார்*
*தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் இரா.தாஸ்: பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் கொடுப்பதில்லை. அப்படிக் கொடுப்படும் வீட்டுப் பாடங்கள் ஆரோக்கியமான நினைவூட்டலாகவே இருக்கும்*
*அனைத்து மாணவர்களுக்கும் இல்லாமல் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மட்டும் வீட்டுப்பாடம் கொடுக்கலாம் என்பது எனது கருத்து என்றார
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post