Title of the document


மதுரையில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டம், நிர்வாகம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது


 தமிழகத்தில் 3, 6, 9, பிளஸ் 1 ஆகிய மாணவ, மாணவியருக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாடத்திட்டம் குறித்த சிறப்பு பயிற்சிகள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தின்படி காலாண்டுத் தேர்வு நடந்துமுடிந்துள்ளது. அதையடுத்து அரையாண்டுத் தேர்வுக்கான பாடங்கள் நடத்தப்படவுள்ளன.
முன்னதாக அதுதொடர்பான சிறப்பு புத்தாக்கப் பயிற்சியை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை காலை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். புதிய பாடத்திட்ட பாடங்கள் குறித்தும், அவற்றை நடத்துவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்களை தீர்ப்பது குறித்தும் இதில் விளக்கப்பட்டது.
 பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அரசு திட்டம் மற்றும் பாடத்திட்டம் குறித்து கணினிகள் வாயிலாக அறிவது குறித்த சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மேலும், அரசு கல்வித்துறையில் செயல்படுத்திவரும் திட்டங்களை கையாள்வது குறித்தும், நிதி யை கையாளும் முறைகள் குறித்தும் புதன்கிழமை இரண்டாவது நாளாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்ந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்படவுள்ளன. ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சின்னதுரை உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
நீட் பயிற்சி வகுப்புகள்: மதுரையில் 15 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வுக்கான பயிற்சியில், திங்கள்கிழமை  827 மாணவ, மாணவியர் பங்கேற்றதாகவும், அதில் 137 பேர் பொறியியல் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கு வந்ததாகவும் கல்வித்துறை அலுவலர்கள் கூறினர். ஆனால், ஆசிரியர்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post