மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அக்.,2 வரை ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ரயில்வே ஊழியர்கள், தொழிலாளர்கள், சில தினங்களாக ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன் வளாகம் உள்ளிட்டவற்றை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், பள்ளி மாணவ, மாணவிகள், தூய்மை இந்தியா திட்ட செயல்கள் குறித்து விளக்கி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தனர். மேலும் பள்ளி என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் தூய்மை விழிப்புணர்வு நாடகத்தையும் நடத்தி காட்டினர்

0 Comments:

Post a Comment