Title of the document

அரசு பொதுத்தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு வெற்றி பார்முலாவை சொல்லித்தரும் பயிற்சி நெல்லையில் வரும் 2ம் தேதி நடக்கிறது


பள்ளியில் மாணவ, மாணவிகள் தெளிவாக புரிந்து படிப்பது, தைரியமாக தேர்வை எழுதுவது நல்ல மார்க் வாங்குவது என்ற விஷயத்தில் ‘சின்ன பார்முலா’உள்ளது  என்பதை வேல்யூ மீடியா நிறுவனம் நம்புகிறது. அந்த டெக்னிக்கை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துவிட்டால் பள்ளிதேர்வுகளில் மட்டுமல்ல... கல்லூரி தேர்வுகளிலும், போட்டித் தேர்வுகளிலும் வேலைக்கான போட்டித் தேர்வுகளிலும் அவர்களால் எளிதாக வெற்றியை சாதிக்க முடியும்


அத்தகைய எளிய யோசனைகளை சொல்லித்தர  ‘சக்ஸஸ் பார்முலா’ என்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சி வரும் 2ம் தேதி பாளை.,வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.,இன்ஜி.,கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடக்கிறது


இந்நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் சோமசுந்தரம், மதுரை அன்னை பாத்திமா கல்லூரி தலைவர் ஷா, மாணவர்களுக்கான மனநல ஆலோசகர் ஹேமா மாலினி ஆகியோர் வழிகாட்டும் பயிற்சியை நடத்துகிறார்கள். அதோடு விஜய் டிவி.,புகழ் ஈரோடு மகேஷ் உரையாற்றுகிறார்


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதில் முன்னணியில் திகழும் இந்த நிபுணர்களின் பயிற்சி இப்போது நெல்லை மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது


 தினமலருடன் இணைந்து இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்கலாம்


முன்னணி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக 200 ரூபாயும், பெற்றோருக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது


 அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேனீர் வழங்கப்படுகிறது. அரங்கத்தின் நுழைவு வாயிலிலும் காலை 9 மணிக்கு பதிவு துவங்குகிறது


இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வு எழுதும்திறன் பெறுவார்கள் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறுகின்றனர். விபரங்களுக்கு 73586–89692, 63817–43192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post