Title of the document
இயற்கை வேளாண்மை மற்றும் மூலிகைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற் படுத்த 100 பள்ளிகளில் மாடித் தோட்டங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது


நகர்ப்புறங்களில் மாடித் தோட்டம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது


அரசு தோட்டக்கலை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பிலும் மானிய விலையில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500 விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது


 இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது


மேலும் தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மாடித் தோட்டம் அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகின்றன


 அண்டை மாநிலமான கேரளாவில் மாடித் தோட்டம் அமைப்பது தொடர்பான இயக்கங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் அளவில், அவர்களே ஆர்வமாக மாடித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்


ஊரக வளர்ச்சித் துறையின் மகளிர் மேம் பாட்டு திட்டம் சார்பில், நுங்கம் பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாக கட்டிடத்தில் மகளிர் குழுக் கள் சார்பில் மாடித் தோட்டங்கள் அமைத்து பராமரிக்கப்பட்டு வரு கின்றன


 இதற்கிடையில் சென்னை மாநகராட்சி நிர்வாகமே மாடித் தோட்டம் திட்டத்தை கையிலெ டுத்து, மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது


இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது


நகர்ப்புறங்களில் வேளாண்மை இல்லாததால், அதன் முக்கியத் துவம் நகர்ப்புற மாணவர் களுக்கு தெரிவதில்லை


அதை கருத்தில் கொண்டு, வேளாண் பணிகள் குறித்தும், வேளாண்மையால் எப்படி நகர்ப் புற மக்களின் உணவுத் தேவை
பூர்த்தியடைகிறது என்பது குறித் தும், இயற்கை முறையில், மண் புழு உரங்களைக் கொண்டு நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்தும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்ட மிட்டிருக்கிறோம்


அதற்காக மாநகராட்சிப் பள்ளி கட்டிடங்களில் மாடித் தோட்டங் களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்


 மொத்தமுள்ள 281 மாநகராட்சிப் பள்ளிகளில், 100 பள்ளிகளை தேர்வு செய்து, அவற்றில் மாடித் தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன


இத்திட்டம், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, அந்நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது


மூலிகைச் செடிகள்
ஒவ்வொரு பள்ளியிலும் தலா 25 தொட்டிகள் அமைக்கப்படும்


 அவற்றில் 15 தொட்டிகளில் காய்கறி செடிகளும், 10 தொட்டிகளில் மூலி கைச் செடிகளும் நடப்பட உள்ளன. இவற்றை பள்ளி மாணவர்களே பராமரிக்க உள்ளனர். அவற்றி லிருந்து கிடைக்கும் காய்கறிகள், பள்ளி மதிய உணவு திட்டத்துக்கு வழங்கப்படும்


மாநகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலமாக ஏற்கெனவே, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு மாடித் தோட்டம் அமைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உதவியுடன் மாநகராட்சிப் பள்ளிகளில் மாடித் தோட்டங்கள் அமைக்கப்படும்


நம் முன்னோர்கள் “உணவே மருந்து, மருந்தே உணவு” என கடைபிடித்து நோயின்றி வாழ்ந்தனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் இன்று, நாம் உணவை தனியாகவும், மருந்தை தனியாகவும் உண்கிறோம். இம் மருந்துகள் பக்க விளைவை ஏற் படுத்தக்கூடியதாக உள்ளன


இந்த மாடித் தோட்டம் திட்டத்தில் மூலி கைச் செடி வளர்ப்பும் இடம் பெற்றுள்ளதால், இயற்கை வேளாண்மை மற்றும் மூலிகைகள் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பாக அமையும்


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post