நீட் தேர்வை எழுதும் அளவுக்கு தமிழக கல்வியில் தரம் இல்லை: சிபிஎஸ்இ


தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய வழக்கை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.
நீட் தேர்வின்போது தமிழில் வினாத்தாள் குளறுபடி ஏற்பட்டதால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த மாதம் 30ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அடுத்த ஆண்டு நீட் தேர்வின்போது குளறுபடிகள் நடக்காமல் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டு நேற்றைக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஏ.பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ தரப்பு வாதத்தில், தமிழக மாணவர்களை பொருத்தவரையில் பல ஆண்டுகளாக நீட் தேர்வை எழுதும் அளவிற்கு கல்வி தரம் இல்லாமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் தேர்வின் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆங்கில வினாக்களை பார்த்து சரிசெய்ய மானவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகேஸ்வரராவ், ‘‘உங்களது கருத்து தவறானது. ஒரு வழக்கறிஞராக தமிழக அரசின் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளேன். தமிழகத்தில் படிப்பதற்கான திட்டங்கள் மிகவும் சிறந்தவையாகும். இதில் தமிழக அரசு பின் தங்கிய பகுதி மாணவர்களுக்காகவே கவலைப்படுவதாக தெரிகிறது’’ என கூறினார்.

இதையடுத்து டிகே.ரங்கராஜன் தரப்பு வாததில், தமிழ் மொழியில் வினாத்தாள் கொடுக்கும் போது அதனை சரிபார்க்க வெளிநாட்டு ஆங்கில மொழித்தாளுடன் கூடிய இரு வகை வினாத்தாள் எதற்கு. எங்களது தாய்மொழி தமிழ் வினாத்தாள் மட்டும் இருந்தாலே போதும்’’ என வாதிட்டார்.இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டனர்.

0 Comments:

Post a Comment