கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8339 காலிப்பணியிடங்கள்; செப்.23 கடைசி நாள்இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விபரங்கள் பின்வருமாறு:
காலிப்பணியிடங்கள்: 8339
அறிக்கை வெளியான நாள்: 26 ஜூன் 2018விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே
விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 24, 2018
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 23, 2018
கல்வித்தகுதி: ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.  முதுகலை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் அல்லாத இதர பணிகளுக்கு 12ம் வகுப்பு/ டிகிரி முடித்திருக்க வேண்டும்.
இந்தியா முழுவதுமுள்ள பள்ளிகளில் இந்த பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வாகும் நபர்களுக்கு அவர்களது மாநிலத்திற்கு ஏற்ப இடங்களை தேர்வு செய்துகொள்ளலாம். கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகியவை தெற்கு மண்டலத்தில் (South Zone) உள்ளன.
முழுமையான விவரங்களுக்கு www.kvsangathan.nic.in, https://cbseitms.nic.in/kvs_static/home.html என்ற இணையதளங்களை பார்க்கவும்

0 Comments:

Post a Comment