45 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு


பள்ளிகளில் காலியாக உள்ள, 45 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், விரைவில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க, ஆயிரத்து 474 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, இப்பணியிடங்களில், பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) ஒப்புதல் அடிப்படையில்,மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியத்தில், ஆசிரியர்களை பணியில் அமர்த்த, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.கோவையில், 45 முதுகலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' பி.டி.ஏ., மூலம் நிரப்பப்படும் காலியிடங்களுக்கு ஊதியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'எனவே விரைவில் தகுதியுள்ளவர்களை நிரப்ப, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்

0 Comments:

Post a Comment