உயர்கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண்: கல்வி துறை அறிவிப்புக்கு கல்வியாளர்கள் வரவேற்புஉயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு பொதுத் தேர்வாக அறிவிக்கப் பட்டது. பிளஸ் 1 தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு மாணவர் எடுக் கும் மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு மாணவர் எடுக்கும் மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.


 இதனால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை தொடர்ந்து 3 ஆண்டு களுக்கு மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திக்கவேண்டி இருந் தது. அதன் காரணமாக மாணவர் கள் மன அழுத்தத்துக்கு உள் ளாகினர்.
இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வாக நடைபெறும்.


 அதே நேரத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே எடுத்துக்கொள்ளப் படும் என்ற புதிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.


 இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு துறையினர் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணி வாசகன்


தொடர்ந்து 3 பொதுத் தேர்வு களை எதிர்கொள்ள வேண்டியதை நினைத்து மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருந் தனர்.


 இதற்கிடையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மட்டும் எடுத்துக்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக் குரியது.மாணவர்கள் மட்டுமல் லாது, ஆசிரியர்களுக்கும் மகிழ்ச் சியை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.


 கல்வி என்பது, ஆசிரியருக்கானதோ, அரசுக்கானதோ அல்ல. அது மாணவர்களுக்கானதாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஏற்ற வகையில் எடுக்கப்பட்ட அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.


தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் எம்.பொன்முடி


அரசின் முந்தைய அறிவிப்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரு தேர்வுகளிலும் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடத்தப்படும் நிலை இருந்தது.அந்த நடைமுறையால் அடுத்தடுத்து 3 பொதுத் தேர்வுகளை எதிர் கொள்வது மாணவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும். மன ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.பழைய அறிவிப்பால் அரசுப் பள்ளிகளில் பல மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களை படிக்க முன்வர வில்லை. இந்நிலையில் அரசின் புதிய அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


 மாணவர்கள் நிலையில் இருந்து பார்க்கும் போது, அரசின் புதிய அறிவிப்பு வரவேற்கத்தக்கது


அரசு ஸ்டான்லி மருத்துவமனை யின் முன்னாள் மனநல மருத்துவர் ஜி.எஸ்.சந்திரலேகா


உயர்கல்விக்கு பிளஸ் 1 மதிப் பெண்ணை கணக்கில் எடுக்காமல் பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் கணக் கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வர வேற்கத்தக்கது.
இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் நிம் மதியைத் தரும்.


சில மாணவர்கள் நான் பிளஸ் 1 தேர்வுக்கு கடுமையாக உழைத்து தயாராகிவிட்டேன்.
என்உழைப்பு வீணாகிறதோ என குழப்பத்துக்குள்ளாக வாய்ப்புள் ளது.


 அவர்களுக்கு மாணவர் களும், பெற்றோர்களும் உரிய அறிவுரை வழங்கி, அரசின் புதிய அறிவிப்பால் இழப்பு ஏதும் இல்லை. நன்மை தான் ஏற்படும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.