Title of the document

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

பழமொழி :

A honey tongue and a heart of gall

அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்

பொன்மொழி:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

-அன்னை தெரசா

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1..”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்

2.”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா

நீதிக்கதை :

பாம்பும் விவசாயியும்
(The Farmer and the Snake Story in Tamil)

அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது.

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.

பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.ஜூலை 15 - காமராஜர் பிறந்த நாள் - பள்ளியில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, பல்வேறு போட்டிகள் வைத்து கொண்டாட வேண்டும் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.

2.மருத்துவப் படிப்புக்கான தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3.ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை தமிழக அரசு வெளியீடு.

4.ஜூலை 20-இல் லாரிகள் வேலைநிறுத்தம்: அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஆயத்தம்

5.கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரோஷிய அணி

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post