மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி தீவிரம் அதிகாரிகள் தகவல்


*நலத்திட்டங்கள் வழங்குவதில் குளறுபடி*

*நலத்திட்டங்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால்
மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது*


*அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 முதல் பிளஸ் 2 வரை இலவச நோட்டு, புத்தகங்கள் பருவம் வாரியாக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் பள்ளிகள் துவங்கும் நாளில் இவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது*

 *அதன்படி, இந்த ஆண்டும் துவக்க நாளில் அனைத்து விலையில்லா நோட்டு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.இந்த மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்தது*

*அதில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் குறித்த ஆய்வில் பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை விட வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது*

*சில மாவட்டங்களில் வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்*

*இந்த குளறுபடிகளை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அறிய வருகை பதிவேட்டில் உள்ளபடி மாணவர்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.*